கதை திருட்டு புகார்.. சிக்கலில் கேப்டன் மில்லர்.. எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி வேதனை!
தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தை ராக்கி, சாணிக் காகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இதில் தனுசுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், குமரவேல், பிரியங்கா மோகன், ஜெயபிரகாஷ், ஜாஜ் கொக்கேன், நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
மரியாதையை எதிர்பார்க்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை பின்னணியில் கேப்டன் மில்லர் படத்தின் கதையை எழுதி படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அங்கு வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருக்கும் ஜமீன், ஜமீனுக்கு அடிமையாக இருக்கும் கிராம மக்கள், அவர்களின் எதிர்பார்ப்பு, அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவையே இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் திரைக்கதை. இதை 5 Chapter-களாக கூறியுள்ளார் அருண் மாதேஸ்வரன்.
ஜமீனுக்கு அடிமையாக இருப்பதை விட வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருக்கலாம் என்ற முடிவை தனுஷ் எடுக்கிறார். ஆனால் அது இன்னும் கொடுமையாக இருக்கிறது. அதற்குப்பிறகு தன்னுடைய பாதையை மாற்றுகிறார். கிராம மக்களால் புறக்கணிக்கப்படுகிறார், இறுதியில் அந்த கிராமத்திற்கு இவர் என்ன செய்தார் என்ற இடத்தில் கேப்டன் மில்லர் முடிகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் கதையை தனது ‘பட்டத்து யானை’ நாவலில் இருந்து எடுத்துள்ளதாக நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.