அயோத்தி ராமர் கோயில் திறப்பை அடுத்து 11 நாள் விரத்தை முடித்த பிரதமர் மோடி!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடந்த ‘பிரான் பிரதிஷ்டா’ விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி தனது தனது 11 நாள் விரதத்தை திங்கள்கிழமை முடித்துக்கொண்டார்.

கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் பிரதர் மோடிக்கு ‘சரணமித்’ என்ற இனிப்பு கலந்த பாலை ஊட்டிவிட்டார். இதன் மூலம் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயில் திறப்புக்காக மேற்கொண்டிருந்த 11 நாள் விரதத்தை முடித்துக்கொண்டார். விரதத்தை முடிந்து வெற்றிகரமாக சடங்குகளை நிறைவு செய்ததற்காக கோவிந்த் தேவ் கிரி மஹாராஜ் பிரதமர் மோடியைப் பாராட்டினார்.

அயோத்தியில் ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு சடங்குகள் செய்வதற்காக பிரதமர் மோடி ஜனவரி 12 அன்று தான் விரதம் இருக்கத் தொடங்குவதாக அறிவித்தார்.

தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஆடியோ வெளியிட்ட பிரதமர் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சுப நிகழ்வுக்கு சாட்சியாக இருப்பது தனது அதிர்ஷ்டம் என்று கூறினார்.

“ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. கும்பாபிஷேகத்தின்போது இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு வழிபாட்டைத் தொடங்குகிறேன்” என்று தனது ஆடியோ செய்தியில் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *