‘பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு தகுதி வேண்டும்’ – அர்ச்சனாவை விளாசும் ஜேம்ஸ் வசந்தன்
பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள போட்டியாளர் அர்ச்சனா தொடர்பாகவும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இடம்பெற்ற ஜேம்ஸ் வசந்தன் தமிழில் சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், அவ்வப்போது ட்ரெண்டாக உள்ள விஷயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபகாலமாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியிருக்கிறார். இது பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனா அடிக்கடி சென்று வருவதுடன் மற்றவர்களையும் துணைக்கு அழைத்து செல்கிறார். இந்நிலையில் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விசித்திரா குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது-
பிக்பாஸ் பட்டத்தை வென்று வெளியே போய் ஒரு அந்தஸ்துடன் இருப்பவருக்கு ஒரு நல்ல தகுதி இருக்க வேண்டும். இருப்பவர்களில் ஒப்பீட்டு அடிப்படையில் விசித்திரா, மணி, தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா, மாயா என்று இவர்களை பார்க்கும்போது, யார் சிறந்த ரோல் மாடலாக இருப்பார்கள் என்று பார்க்கும்போது விசித்திராவுக்கு டைட்டில் வழங்கலாம். விசித்திராவை பார்த்து யாராவது ஒரு விஷயத்தில் கெட்டுப் போய் விடுவார்களா? அவரிடம் குறைவான தவறுகள் உள்ளது. எனவே அவருக்குத்தான் பட்டம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
Honest review so far in this season 💯#BiggbossTamil7 #Vichithra #Archana
— Top G (@____venkat___) December 22, 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் அர்ச்சனா வீட்டிற்குள் சென்றுள்ளார். ராஜா ராணி தொடரில் வில்லியாக நடிப்பை வெளிப்படுத்திய அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் அதிகம் கிடைத்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனமாக பங்கேற்கும் அர்ச்சனாவை சுற்றி விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக இவர் சிகரெட் பிடிப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.