இறுதிபோட்டிக்கு முன்னேறிய தமிழக மகளிர் கபடி அணி..!
இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணியும், இமாச்சல பிரதேச அணியும் மோதியது. இதில் தமிழக அணி 37-31 என்ற கணக்கில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
பதக்கப் பட்டியலில் தமிழகம் தற்போது முதலிடத்தில் உள்ளது. தமிழக அணி இதுவரை 4 தங்கம், 2 வெண்கலம் வென்றுள்ளது. டெல்லி அணி 2 தங்க பதக்கத்தையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு வெண்கலம் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேற்கு வங்க அணி அணி ஒரு தங்கப் பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் 4 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.