காஞ்சிபுரத்தில் மீண்டும் LED திரை… நேரலையில் அயோத்தி ராமரைப் பார்க்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
திரை அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேரலை நிகழ்ச்சி செய்வதற்கு போலீசாரின் அனுமதி தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அவசர அவசரமாக மீண்டும் எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு, நேரலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன.
நாடு முழுவதும் அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினையொட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் நிகழ்ச்சி நேரலை ஒளிப்பரப்பபடுகிறது. இந்நிலையில், பல இடங்களில், குறிப்பாக தமிழகத்தில் நேரலை நிகழ்ச்சியை நடத்த விடாமல் போலீசார் செயல்பட்டு வருவதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.
காமாட்சியம்மன் கோயிலில் எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நிகழ்வை நேரலையில் ஒளிப்பரப்ப போலீசாரின் அனுமதி தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்று அயோத்தியில் கோயில் இன்று திறக்கப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளாமல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறார்.
காஞ்சிபுரத்தில், வரதராஜ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் எல்இடி திரை அமைத்து கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பில் காண ஏற்பாடு செய்யப்பட்டது.