பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம்… !
இந்த பள்ளியில் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அதிக மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பொங்கல் விடுமுறையின் போது மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிக்கு கீழ் சம்ப் தொட்டியில் மர்ம நபர்கள் நாயை வீசி சென்று உள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அந்த பகுதி செல்லும் போது துர்நாற்றம் வீசி வந்துள்ளதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிக்கு தெரியப்படுத்தி இறந்து கிடந்த நாயினை அப்புறப்படுத்தினர். அத்துடன் தொட்டியினை சுத்தம் செய்தனர். இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அவரை தொடர்பு கண்டு கேட்டதற்கு இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.