பாலக்காடு அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.1.80 கோடி கருப்பு பணம் பறிமுதல்: இருவர் கைது
இதனை தொடர்ந்து பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்றை கேரளா போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின் இருக்கையின் அடியில் கட்டுக்காட்டாக பணம் இருந்தது சோதனையில் தெரியவந்தது. இதனை அடுத்து உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் காரில் மறைத்து வைத்திருந்த ரூ.1.80 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் பணம் கடத்தி வந்த முகமது நிசார் மற்றும் முகமது குட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .