புதரில் மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு பருந்துப் பார்வை!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லாமல், மந்திரமில்லாமல் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் அதன் சுவாரசியத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை, லட்சக் கணக்கான நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை வேறு எங்கே மறைத்து வைத்துவிட்டு, உங்கள் பார்வையை அந்த இடத்தில் இருந்து வேறு எங்கோ ஒரு திசையில் திருப்பிவிடும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஒரு தந்திரம் என்கிறார்கள். நாம் நினைத்துப் பார்கவே முடியாத ஒரு இடத்தில் நாம் தேடும் விலங்கை மறைத்து வைத்திருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவால் ஒரு மேஜிக் என்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல், திணறி நிற்கும்போது, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு குழப்பம் என்கிறார்கள். ஆனால், புத்திசாலித் தனமாக யோசித்து விரைவாகத் தேடிக் கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடியாகத்தான் இருக்க வேண்டும்.