வாயில் வைத்தால் கரையும் பாதாம் அல்வா: 15 நிமிடங்களில் செய்திடலாம்
தேவையான பொருட்கள்
1 கப் பாதாம்
முக்கால் கப் பால்
1 கப் சர்க்கரை
குங்குமப் பூ பாலில் ஊறவைத்தது 3 ஸ்பூன்
2 ஸ்பூன் நெய்
கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி
செய்முறை: பாதாமை, பாலுடன் சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைய வேண்டும். தொடர்ந்து அரைத்த பாதாமை சேர்க்க வேண்டும். தொடர்ந்து கிளரவும்.
நெய் சேர்த்து கிளர வேண்டும். நன்றாக கிளர வேண்டும். 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். தொடர்ந்து சில முறை கிளரவும்.