சுடு சாப்பாட்டிற்கு சுவை அள்ளும்; பலாக்காயில் காரசார பொரியல்: வீட்டில் இப்படி செய்யுங்க
பலாக்காயில் காரசார பொரியல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பலாக்காய் உரித்தது- 10
தேங்காய்- 1 கப்
உப்பு-தேவையான அளவு
மஞ்சள்-1 டீஸ்பூன்
சீரகம்-1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 3
எண்ணெய்- தேவையான அளவு
கடுகு- தேவையான அளவு
உளுந்து- தேவையான அளவு
கடலை பருப்பு- தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
கரம் மசாலா- 1 டீஸ்பூன்
வெங்காயம்- 1 கப்
செய்முறை
முதலில் பலாக்காயை தோல் நீக்கி நன்றாக கழுவி எடுத்துக்கவும். தோல் நீக்கிய பலாக்காயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கவும். . ஒரு குக்கரில் நறுக்கிய பலாக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக விட வேண்டும். 2 விசில் விட்டு எடுக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சமாக தேங்காய் சேர்த்து, 3 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடலை பருப்பு, கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன உடன் அதில் அரை ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் ஸ்பூன் கரம் மசாலா தூளை சேர்த்து கலக்கவும்.
அடுத்து அதில் மீதம் வைத்துள்ள தேங்காய் சேர்த்து கிளறி விடவும். மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான காரசாரமான பலாக்காய் பொரியல் ரெடி.