இஷா புயலுக்கு முடங்கிய லண்டன்… ரயில், விமான சேவைகள் பாதிப்பு: பலத்த காற்றால் மக்கள் அவதி

லண்டனில் பலத்த காற்று மற்றும் மழையுடன் இஷா புயல் தொடங்கியுள்ளது. பிரித்தானியா முழுக்க அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இஷா புயல் தாக்கியுள்ளது.

ரயில் மற்றூம் விமான சேவைகள் ரத்து

லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றூம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் சேவைகள் தாமதமாகலாம் என்றும், பல நிறுவனங்கள் சேவையை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை பகல் வரையில் ரயில் சேவைகள் முடங்கும் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, பர்மிங்காம் மற்றும் லண்டன் யூஸ்டன் இடையே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற வழித்தடங்களில் குறைந்த சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகல் 06:00 மணி வரையில்

 

லண்டன் மற்றும் தென் கிழக்கின் சில பகுதிகள் தவிர பிரித்தானியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வானிலை அலுவலக அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இது பகல் 06:00 மணி வரையில் நடைமுறையில் இருக்கும்.

காற்றின் வேகம் மணிக்கு 128 கி.மீ என இருக்கும் என்றும், பிரித்தானியா முழுக்க அம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுவது அரிதான ஒன்று எனவும் வானிலை ஆய்வு அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பிருப்பதாக கூறி, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் ரயில் சேவை நிர்வாகம், அதன் அனைத்து அவசர நேர ரயில்களையும் ரத்து செய்துள்ளதாகவும் திங்கட்கிழமை பிற்பகல் வரையில் சேவைகள் இருக்காது என்றும் எச்சரித்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *