குண்டு குண்டா இருக்குற தொப்பையை 15 நாட்களில் குறைக்க இந்த பச்சை இலை ஒன்று போதும்

இதற்கு முக்கிய தவறான உணவு பழக்கமும், வித்தியாசமான வாழ்க்கை முறையும்தான். அதுமட்டுமின்றி உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், ஒரு சிறப்பு பச்சை இலையை உட்கொண்டால், எளிதாக உடல் எடையவ குறைக்கலாம் என்று கூறியுள்ளார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

உடல் எடையை குறைக்க இந்த இலையை சாப்பிடுங்கள்
நிகில் வாட்ஸின் கூற்றுப்படி, வல்லாரை கீரைகள் (Vallarai Keerai) எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதன் அறிவியல் பெயர் சென்டெல்லா ஆசியாட்டிகா (Centella Asiatica) ஆகும். அதேபோல் சமஸ்கிருதத்தில் மண்டுகபர்ணி என்றும் இந்த கீரையை அழைக்கப்பார்கள். இது போன்ற மூலிகை தான் நம் உடலுக்கு பல விதங்களில் நன்மை பயக்கும்.

வல்லாரை கீரை கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி?
வல்லாரை கீரைகள் எந்த ஆயுர்வேத மருந்துக்கும் குறைவானது அல்ல, இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. வல்லாரை கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் காரணமாக, இது

உதவுகிறது. பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் (National Center for Biotechnology Information) அதாவது NCBE படி, உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் வல்லாரை கீரையில் காணப்படுகின்றன, இது உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

வல்லாரை கீரையை எப்படி சாப்பிடுவது?
உடல் எடை குறைய வேண்டுமானால் முதலில் வல்லாரை கீரையின் இலைகளை சுத்தம் செய்து அரைத்து பேஸ்ட் தயாரித்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் கலந்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் உடல் கொழுப்பு குறைய ஆரம்பித்து, அதன் பலன் தெளிவாக தெரியுத் தொடங்கும்.

வல்லாரை கீரையை கஞ்சியாகும் உட்கொள்ளலாம், இது உடல் எடை குறைக்க உதவும். இதற்கு முதலில் புழுங்கல் அரிசி, திணை அரிசி, குதிரை வாலி அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை கழுவி குக்கரில் சேர்த்து சின்ன வெங்காயம் 6, பூண்டு பல், சீரகம், உப்பு மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். பின் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். பின் வல்லாரை கீரையையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். நன்கு வதங்கியதும் கஞ்சியில் கொட்டி நன்கு கலந்துகொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *