இது தெரியுமா ? தினமும் ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டு வந்தால்…
தேங்காயில் நிறைய கொழுப்பு இருக்கிறது என்று சொல்வது உண்மை தான். ஆனால் கொழுப்பில் எல்.டி.எல்., மற்றும் எச்.டி.எல் என்னும் இரண்டு வகை உண்டு.
அதில் தேங்காயைப் பொருத்தவரையில் உடலுக்கு நன்மை செய்கின்ற சீரான கொழுப்புச் சத்தே நிறைந்திருக்கிறது. குறிப்பாக பச்சையாக சாப்பிடும் போது உடலில் அது நல்ல கொழுப்பாகவே சேர்கிறது. ஆனால் தேங்காயை சமைக்கிறோம் என்று சூடு செய்கின்ற பொழுது, தேங்காயில் கொழுப்புச் சத்து அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
அதனால் தான் தேங்காயை உடைத்து அரை மணிக்குள் அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அது உடலுக்கு அமிர்தத்தைப் போன்றது என்று பெரியோர்கள் சொல்வதுண்டு.
- தேங்காயில் உள்ள கொழுப்பைத் தாண்டி, நம்முடைய உடலில் தேங்கியிருக்கின்ற கெட்ட கொழுப்புகள் மற்றும் உடலில் தேங்கியிருக்கும் அழுக்குகள், நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் தேங்காய்க்கு உண்டு. அதோடு நம்முடைய ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும் ஆற்றலும் தேங்காயில் இருக்கிறது.
- தலை முதல் கால் வரை உள்ள பகுதிகள் மற்றும் உடலின் உள்ளுறுப்புகளையும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளும். உடலை வலுப்படுத்தும். செல் வளர்ச்சிக்கு உதவும். உடலில் புதிய செல்களைத் தோற்றுவிக்கும்.
- தேங்காயை சமையலில் சேர்க்கும் போது, குறிப்பாக குழம்பு வகைகளில் தேங்காயை அரைத்து கொதிக்க வைக்கிற பொழுது, அது சூடாகி உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்பாக மாறிவிடுகிறது. இதுவே பச்சையாக சாப்பிடும்பொழுது அதிலுள்ள முழு சத்தும் நமக்குக் கிடைக்கும். அதோடு உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பையும் எளிதாகப் பெற முடியும்.
- குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்ற பெயரில் கண்ட கண்ட பாக்கெட் உணவுகளையும் ஜங்க் ஃபுட்களையும் கொடுக்கிறோம். அதற்கு பதிலாக தேங்காயைப் பூப்போல துருவி அதில் சிறிது நாட்டுச் சர்க்கரை கலந்து மாலை வேளைகளில் ஸ்நாக்ஸாகக் கொடுக்கலாம். அது உடலுக்கும் எந்த தீங்கும் செய்யாது. எலும்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.
- யாரேனும் இறக்கும் தருவாயில் இருந்தால் அவர்களுடைய வாயில் பசும்பால் ஊற்றுவார்கள். அவர்கள் அதை குடித்துக் கொண்டே இறக்கும் வழக்கமும் சடங்குபோலவே இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் இந்த பால் ஊற்றும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா? பழங்காலத்தில் பசும்பாலுக்கு பதிலாக தேங்காய்ப் பால் தான் ஊற்றுவார்கள்.