Rajinikanth: அயோத்தி வீதிகளில் சிங்கநடை போட்ட ரஜினிகாந்த்.. ரசிகர்கள் உற்சாகம்!

யோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி இன்றைய தினம் கோலாகலமாக நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அயோத்திக்கு சென்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் தன்னுடைய மனைவியுடன் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். நேற்றைய தினம் அவர் வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது மற்றும் அயோத்தி சென்றதுவரை அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

ஆன்மீகத்தில் அதிகமான நாட்டம் கொண்ட ரஜினிகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பே அயோத்திக்கு சென்ற நிலையில், தற்போது கும்பாபிஷேகம் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னதாக அயோத்தியின் வீதிகளில் அவர் நடந்து சென்று கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் இடத்திற்கு சென்றார். அடுத்தடுத்து இதன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் மிகந்த ஈடுபாடு கொண்டவர். இமயமலை பயணங்களுக்கு அடிக்கடி சென்று வருபவர். தன்னுடைய படங்களின் ரிலீசின்போதோ, மற்ற சிறப்பான நிகழ்வுகளின்போதோ ஆண்டுதோறும் இமயமலைக்கு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்ட ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் ரிலீசின்போது அவர் இமயமலை பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின்போதே அவர் அயோத்தியில் கட்டப்பட்டு வந்த ராமர் கோயிலுக்கும் விசிட் செய்திருந்தார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: இந்நிலையில் இன்றைய தினம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கும் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்துடன் அவர் பயணம் மேற்கொண்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *