Vijay – GOAT அப்டேட் ஒருபக்கம் இருக்கட்டும்.. தளபதி விஜய் வாங்கிய காரின் விலை தெரியுமா?.. செம கார்
சென்னை: நடிகர் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது.
உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்துவருகிறது.
இளைய தளபதியாக இருந்து இப்போது தமிழ் சினிமாவின் தளபதியாக உயர்ந்து நிற்பவர் விஜய். அவர் திரைப்பயணத்தை ஆரம்பித்தபோது ஏகப்பட்ட கிண்டல்களை சந்தித்தார். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது இலக்கில் கவனமாக இருந்த அவருக்கு இன்று இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். அவரது நடிப்பு, நகைச்சுவை, நடனம், அமைதி, சண்டை காட்சி என அனைத்துமே அவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
GOAT: கடைசியாக அவரது நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் விஜய். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யுடன் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். படத்துக்கு GOAT (Greatest of all time) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் பெயருக்கு பல தரப்பிரனிடமிருந்து பாசிட்டிவ் கருத்துக்களே கிடைத்திருக்கின்றனர்.
முழு வீச்சில் ஷூட்டிங்: சென்னையில் பூஜையுடன் GOAT ஷூட்டிங் தொடங்கியது. முதலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து நடனம் ஆடும் பாடல் ஷூட் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் ஷூட்டிங் நடந்தது. இப்போது இலங்கையில் நடந்துவருவதாக கூறப்படுகிறது. அநேகமாக படத்தை பக்ரீத் பண்டிகைக்கு வெளியிட வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
விஜய் ஹேப்பி அண்ணாச்சி: விஜய்யை பொறுத்தவரை தன்னுடைய பட ஷூட்டிங்கை பக்காவாக பிளான் போட்டு முடிக்கும் இயக்குநரை ரொம்பவே பிடித்துவிடும் என்ற பேச்சு உண்டு. அதனால்தான் லோகேஷ் கனகராஜால் தளபதியின் குட் புக்கில் எளிதாக இடம் பெற முடிந்ததாகவும் திரைத்துறையில் கூறுவார்கள். அதேபோல்தான் இப்போது வெங்கட் பிரபுவும் பக்காவாக பிளான் போட்டு எந்த சொதப்பலும் இல்லாமல் ஷூட்டிங் செய்துகொண்டிருக்கிறாராம். அதனைப் பார்த்த விஜய் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.