உணவுக்காக அதிகம் கொல்லப்படும் உயிரினம் எது தெரியுமா?
ஆண்டொன்றுக்கு உணவுக்காக மட்டும் 10,000 கோடி விலங்குகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி எகனாமிஸ்ட் என்ற முன்னணி செய்தி நிறுவனம் இது குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்டு ஒன்றுக்கு 1900 கோடி கோழிகளும், 150 கோடி மாடுகளும், 100 கோடி ஆடுகளும், நூறுகோடி பன்றிகளும் உணவுக்காக கொல்லப்படுகின்றன.
இவை தவிர்த்து மற்ற பல விலங்குகளும் உணவுக்காக மனிதர்களால் பலியாக்கப்படுகிறது. ஒட்டு மொத்த உயிரினங்களில் அதிகம் உணவுக்காக சாப்பிடப்படும் உயிரினமாக கோழி உள்ளது.
நாளொன்றுக்கு 20 கோடிக்கும் அதிகமான கோழிகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. அந்தவகையில் ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோழிகள் உயிரை விடுகின்றன.
இதேபோன்று ஆண்டொன்றுக்கு 50 ஆயிரம் ஆமைகளும், 83 ஆயிரம் முதலைகளும், ஒரு லட்சம் எருமை மாடுகளும் கொல்லப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் ஒட்டகங்கள் உணவுக்காக பலியாக்கப்படுகின்றன.
50 லட்சம் குதிரைகள் ஆண்டொன்றுக்கு உணவுக்காக அறுக்கப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்று நாய்கள், புறாக்கள், சுறா உள்ளிட்டவையும் அதிக எண்ணிக்கையில் உணவுக்காக மனிதர்களால் வேட்டையாடப்படுகிறது
உலகிலேயே மிகமிக அதிக அளவு அசைவ உணவை எடுத்துக் கொள்ளும் நாடாக சீனா இருந்து வருகிறது. உலகின் ஒட்டுமொத்த அசைவு உணவு நுகர்வில் சீனாவின் பங்கு 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.