10 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் தோல்வியடைந்த ஆஸி. மகளிர் அணி..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 219 ரன்களும், ஆஸ்திரேலியா 406 ரன்களும் எடுத்திருந்தன. 187 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று 3 ஆவது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்சை விளையாடியது.

நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. அன்னாபெல் சதர் லேண்ட 12 ரன்னும், ஆஷ்லே கார்டனர் 7 ரன்னும் எடுத்து களத்தில் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் மேலும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மொத்தம் 74 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் வீராங்கனைகள் களத்தில் இறங்கினர். தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 4 ரன்னிலும், ரிச்சா கோஷ் 13 ரன்னிலும் வெளியேற, பின்னர் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்த ஜெமிமா ரோட்ரிகஸ் பொறுப்புடன் விளையாடினர்.

18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ருதி மந்தன 38 ரன்களும், ஜெமிமா 12 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் இன்று தோல்வியை சந்தித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *