இது தெரியுமா ? தினமும் இரவு ஏலக்காய் சுடு தண்ணீருடன் எடுத்து வந்தால்…
பனி காலங்கள் நெருங்க நெருங்க பலரும் தண்ணீர் குடிப்பதை குறைத்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வெளியே குளிரான நிலை இருப்பதால் தண்ணீர் தாகம் குறைந்துவிடும்.
ஆனால் உண்மை என்னவென்றால் அந்த நேரத்தில் நாம் நிச்சயமாக தண்ணீர் குடித்து நம் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால் தலைவலி, ஜலதோஷம் போன்ற உபாதைகள் ஏற்படும். ஏலக்காய் தண்ணீர் என்பது மிகவும் சாதாரண விஷயம்தான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நன்மைகள் ஏராளம்
எப்படி தயாரிப்பது? ஏலக்காய் தண்ணீரைத் தயாரிக்க, முதலில், ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து, 5 முதல் 6 ஏலக்காயை உரித்து, இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன், தண்ணீரை கொதிக்க வைக்கவும். முக்கால் கப் அளவிற்கு தண்ணீர் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். இப்போது அதை வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை குடிக்கவும்.
– ஏலக்காய் நமது உடல் மெட்டாபாலிசத்தை அதிகரித்து பித்த நீரை அதிகரித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. எதுகளித்தல், வாய்வு தொல்லை போன்றவற்றை சரியாக்குகிறது.
-ஏலக்காய் நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.