Rahu Ketu Transit: ராகு கேதுவால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்
நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் இவர்களும் உள்ளனர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்கள். இவர்கள் எப்போதும் இருவரும் சேர்ந்து பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள்.
ராகு பகவான் தற்போது மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய பிறகு 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
இந்நிலையில் ராகு கேதுவின் பார்வையானது வரும் 2024 ஆம் ஆண்டு சில ராசிக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் கேதுவின் பயணமும் ராகுவின் பயணமும் உள்ளது. இது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. புதிய வீட்டிற்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் விருப்பமான இடமாற்றம் கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொறுமையாக இருந்தால் பண இழப்பை சரி செய்யலாம். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் விளக்கும்.
மகர ராசி
உங்களுக்கு ராகு கேது நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. அசாத்தியமான தைரியத்தால் அனைத்தையும் செய்யக்கூடிய திறன் கிடைக்கும். இதுவரை காரியத்தில் நடந்த தடைகள் அனைத்தும் விலகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்ப ராசி
ராகு கேது உங்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கப் போகின்றனர். குடும்பத்தில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி நிலையாக இருக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். சிக்கல்கள் ஏற்பட்டால் அமைதியாக இருப்பது நல்லது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தேவையில்லாத வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும்.