’30 ஆண்டுக்கு முன்பே கூறிவிட்டேன்’.. அயோத்தி ராமர் கோவில் பற்றி ஒரே வார்த்தையில் கமல்ஹாசன் பதில்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இன்று முதல் மக்கள் தரிசனத்துக்காக கோவில் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் ராமர் கோவில் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் கடந்த 2019ல் அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சனைக்குரிய 2.7 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 2020ல் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதையடுத்து பணிகள் தொடங்கின. மொத்தம் 5 மண்டபங்களுடன் 3 அடுக்குகளாக ரூ.1800 கோடி செலவில் பணிகள் தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணியால் கோவிலில் முதல் தளம் முழுமையாக பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.900 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் கடந்த 18 ம் தேதி 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை கோவில் கருவறையில் நிறுவப்பட்டது.நேற்று இந்த சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். குழந்தை பருவ ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. சிரித்த முகத்துடன் தெய்வீகமாக பார்வையில் ராமர் அருள் பாலிக்கிறார். இப்படியாக நேற்றைய தினம் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
நேற்று கும்பாபிஷேகம் முடிந்தாலும் கூட பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். இந்நிலையில் தான் பொதுமக்களின் தரிசனத்துக்காக இன்று அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து அயோத்தியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.