‘பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா’ – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு முதல் திட்டமாக பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனாவை செயல்படுத்த வேண்டும் என என் மனதில் தோன்றியுள்ளது.

இந்த திட்டத்தின் வாயிலாக மக்கள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் உலகின் அனைத்து பக்தர்களும் சூர்யவன்ஷி ஸ்ரீ ராமரின் ஒளியில் இருந்து ஆற்றலைப் பெறுவார்கள்.

இது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தை கணிசமாக குறைப்பது மட்டுமின்றி எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவை காண உதவும். இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளில் சூரியமின் தகடுகளைப் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *