சென்னையில் இன்று காங்கிரஸ் முற்றுகை போராட்ட அறிவிப்பு..!
தமிழக காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராகுல் காந்தி இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி நடைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். பா.ஜ.க. ஆளும் அசாமில் லக்கிம்பூருக்கு ராகுல் நடைப்பயணம் சென்ற போது, அதில் பங்கேற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்களும் போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காரை வழிமறித்திருக்கிறார்கள். இந்த இழிவான தாக்குதல் வெட்கக்கேடானது. ஜனநாயக ரீதியாக மேற்கொள்ளப்படும் நடைப்பயணத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் இன்று காலை 11 மணியளவில் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அசாம் பவன் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.