#JUST IN :- நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானார்!
நீர்வழிப் பாதை என்றால் என்ன?
பொதுவாக மேடான பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கியே தண்ணீர் செல்லும். அதற்கேற்பவே கால்வாய்களும் உள்ளன. அப்படி இல்லாமல், தரைப்பகுதி ஒரே கிடைமட்டமாக இருக்கும்படி கால் வாய் அமைத்தால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம். இதை சமவெளி கால்வாய் என்று அழைக்கிறோம்.
கடல் மட்டத்திலிருந்து கால்வாய் நெடுகிலும் சம உயரத்தில் இருக்கும். ஏற்ற, இறக்கங்கள் இல்லாத சம உயரத்தைக் கொண்டதாக அதன் நீர் மட்டம் அமைந்திருக்கும். ஆகவே, சமவெளிக் கால்வாயின் ஏதேனும் ஓரிடத்தில் தண்ணீரின் அளவு அதிகரித்தால், மட்டம் குறை வாக உள்ள மற்ற பகுதிக்கு தண் ணீரை மிக எளிதாக எடுத்துச் செல் லலாம். அதாவது கோதாவரியில் வெள்ளம் ஏற்பட்டால் சமவெளிக் கால்வாய் மூலம் காவிரிக்கு அந்த வெள்ள நீரைக் கொண்டு வரலாம். காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் கோதாவரிக்கும் கொண்டு செல்ல முடியும்
.ஆறுகள் இணைப்பு மூலம் புதிய நீர்வழிச்சாலையை உருவாக்கவும், பருவமழை காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் பல திட்டங்களை வகுத்தவர்.
அவரின் நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை, கருணாநிதி, கலாம் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
மேலும், அவர் ‘திருக்குறள் காட்டும் நமது நாகரிகம்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி காமராஜ் தனது 90வது வயதில் இன்று அதிகாலை 12.05 மணிக்கு காலமானார்.