சென்னையிலிருந்து அயோத்திக்கு செல்ல ஒரு நபருக்கு வெறும் ரூ1797 தான் செலவாகுமா? எப்படி போகனும் தெரியுமா?

உபி மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்தியா முழுவதும் இந்த நிகழ்வு தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல நீண்ட ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்த கோயில் கும்பாபிஷேகத்துடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோவிலுக்கு சுற்றுலா செல்ல பலர் திட்டமிட்டு வருகின்றனர். அப்படியாக தமிழகத்தில் இருந்து இந்த கோவிலுக்கு எப்படி செல்லலாம் என்று விவரங்களை காணலாம்.

இந்தியாவில் மிக நீண்ட நாட்களாக நடைபெற்ற போராட்டம் என்றால் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கான போராட்டம் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் இது மிகப்பெரிய பிரச்சனையாக பேசப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு சட்ட போராட்டங்கள் நடந்தது. இறுதியாக அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

இன்று முதல் பொதுமக்களுக்கு தரிசனத்திற்காக இந்த கோவில் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் இந்த கோயிலுக்காக பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் பலர் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு வரும் நிலையில் இந்த திட்டமிடல்களுக்கான சில டிப்ஸ்களை வழங்குவதற்கு தான் நாங்கள் இந்த செய்தியை உங்களுக்கு வழங்கி உள்ளோம்.

சென்னையிலிருந்து அயோத்தி என்பது சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. நீண்ட தூரம் என்பதால் பெரும்பாலும் ரயில் மற்றும் விமானங்களில் தான் பலர் பயணம் செய்வார்கள். ஆனால் அயோத்தியில் தற்போது புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதால் விமானம் மற்றும் ரயில் டிக்கெட் பெரும்பாலும் விட்டு தீர்ந்து விட்டன. இதனால் பலர் சொந்தமான கார்களில் பயணம் செய்யலாம் என திட்டமிடுகிறார்கள்.

இப்படியாக நீங்கள் குடும்பத்துடன் சொந்த காரில் பயணம் செய்ய திட்டமிட்டால் உங்களுக்கு ஏற்ற கார் மாருதி சுஸூகி எர்டிகா கார் தான். இதில் ஏழு பேர் வரை பயணம் செய்ய முடியும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இவர்கள் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் இந்த கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் சென்னையிலிருந்து கிளம்பி அயோத்தி வரை சென்றுவர எவ்வளவு செலவாகும் என்ற விபரங்களை காண்போம்.

இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனையில் இருக்கிறது பெட்ரோல் வேரியன்ட் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட் பெட்ரோல் வேரியன்டை பொறுத்தவரை தற்போது 20 முதல் 21 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி என்றால் 26 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இது இருக்கிறது. நீண்ட தூர பயணம் என்பதால் அதிக பெட்ரோல் செலவை குறைக்க அதிக மைலேஜ் உள்ள கார்கள் தான் தேவை.

அதன்படி பார்த்தால் சென்னையில் இருந்து அயோத்தி சுமார் 1931கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. சாலை வழியாக பயணம் செய்தால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும் இதற்கு பயண நேரம் மட்டுமே 36 மணி நேரம் ஆகும் அதாவது ஒன்றரை நாள் ஆகும். சரி இந்த பயணம் செய்ய எவ்வளவு செலவாகும் தெரியுமா சென்னையிலிருந்து அயோத்திக்கு பயணிக்க எர்டிகா 7 சீட்டர் பெட்ரோல் காரில் பயணித்தால் 91 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.

இதுவே சிஎன்ஜி காரில் பயணித்தால் 74 கிலோ சிஎன்ஜி செலவாகும். அப்படி என்றால் இங்கு இருந்து அயோத்திக்கு சென்று மீண்டும் திரும்ப சென்னை வர மொத்தம் பெட்ரோல் என்றால் 182 லிட்டர் பெட்ரோலும், சிஎன்ஜி என்றால் 148 கிலோ செய்யும் செலவாகும் இன்றைய நிலவரப்படி சென்னையில் ரூபாய் 102 என்ற விலையில் பெட்ரோல் விற்பனை ஆகிறது. அப்படி என்றால் பெட்ரோல் மட்டும் 18,564 செலவாகும்.

சிஎன்ஜி என்றால் இன்று இரவு எப்படி சென்னையில் 85 என்ற விலையில் ஒரு கிலோ சிஎன்ஜி விற்பனையாகிறது. அதன்படி கணக்கீட்டால் சிஎன் ஜி வாகனத்தில் சென்று வர சுமார் 150 ரூபாய் செலவாகும். இந்த காரில் 7 பேர் பயணிக்கலாம் என கணக்கிடும்போது. சிஎன்ஜி காரில் ஒரு நபருக்கு 1797 ரூபாய் மட்டுமே எரிபொருளுக்கான செலவாகும். இதுவே பெட்ரோல் கார் என்றால் 2,652 ரூபாய் செலவாகும்.

எந்த காரில் பயணித்தாலும் பயண நேரம் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கும் 36 மணி நேரம் பயணம் ஆகும் இதில் காத்திருப்பு நேரம் கணக்கில் வராது. இதுபோக ஒவ்வொரு நபரின் டிரைவிங் திறன் மற்றும் ஸ்டைலுக்கு ஏற்ப பயண நேரம் என்பது மாறுபடும் அதே நேரம் மைலேஜ் மற்றும் பயண செலவுகளும் மாறுபடும். இந்த கணக்கில் சுங்க கட்டணங்கள் கணக்கிடப்படவில்லை. சுங்க கட்டணங்கள் தனியாக செலவு செய்ய வேண்டும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *