இந்த காரோட நின்னு போட்டோ எடுக்க நடிகர்கள்ல இருந்து அரசியல்வாதிங்க வரை கடும் போட்டி… ஓனர் யாருன்னு தெரியுதா?

இந்தியா முழுவதும் இன்று உச்சரித்து கொண்டுள்ள நாமம், ஜெய் ஸ்ரீ ராம் (Jai Shree Ram). பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளை கடந்து, உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலம் அயோத்தி (Ayodhya) நகரில், ராமர் கோயில் (Ram Mandir) கும்பாபிஷேகம் ஜனவரி 22 கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் (Narendra Modi), நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்துள்ளனர். இதில், சித்தார்த் தோஷியும் ஒருவர் ஆவார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் தொழில் அதிபராக உள்ளதுடன், சமூக வலை தளங்களிலும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இவர் தனது ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF) காரை காவி நிறத்திற்கு மாற்றியுள்ளார். அத்துடன் இந்த காரின் வெளிப்புறத்தில் ராமரின் புகைப்படங்களையும் இடம்பெற செய்துள்ளார். இவர் இதே காரில் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு சென்று, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நாம் இங்கே பேசி கொண்டுள்ள சித்தார்த் தோஷி, பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகர் ஆவார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடும் அவரது காருடன் பல்வேறு பிரபலங்களும் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இதில், மனோஜ் திவாரி (Manoj Tiwari) மற்றும் கேசவ் பிரசாத் மௌரியா (Keshav Prasad Maurya) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இதில் மனோஜ் திவாரி, நடிகராக இருந்து பாஜக (BJP) கட்சியின் எம்பி-ஆக மாறியவர். அதே சமயம் கேசவ் பிரசாத் மௌரியா, உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் ஆவார். சித்தார்த் தோஷியும், அவரது ஜாகுவார் எக்ஸ்எஃப் காரும் செய்திகளில் இடம்பெறுவது இது முதல் முறை கிடையாது.

கடந்த 2023ம் ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாடு (G20 Summit) மாநாடு நடைபெற்றது. அப்போது ஜி20 மாநாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சித்தார்த் தோஷி தனது ஜாகுவார் எக்ஸ்எஃப் அலங்கரித்திருந்தார். அத்துடன் அதே காரில் அவர் குஜராத்தில் இருந்து டெல்லிக்கு பயணமும் செய்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் தோஷியின் ஜாகுவார் எக்ஸ்எஃப் செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரின் மதிப்பு சுமார் 60 லட்ச ரூபாய் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 180 பிஎஸ் பவர் மற்றும் 430 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *