இந்தியாவே எதிர்பார்த்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மீண்டும் புக்கிங் துவங்கியது! உடனே ஓடுங்க!

ரிவர் நிறுவனத்தின் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் மீண்டும் துவங்கியது. அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் ஆன்லைனில் ரூபாய் 2500 கொடுத்து முன்பதிவு செய்யலாம் அல்லது பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமில் இந்த ஸ்கூட்டரை முன் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்

பெங்களூருவை மையமாகக் கொண்டு துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் ரிவர் இந்நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு தான் துவங்கப்பட்டு அந்நிறுவனம் தனியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்து அதை தயார் செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது முதல் தயாரிப்பை கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான தயாரிப்பு எல்லாம் கடந்து 2023 ஆகஸ்ட் மாதம் துவங்கியது.

அந்த மாத இறுதியிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூடர்களுக்கான புக்கிங்கும் துவங்கிய நிலையில் சுமார் 200 ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டன. அதற்கான டெலிவரியும் துவங்கி நடந்து வந்தது. ஒரு மாதத்திலேயே சுமார் 200 ஸ்கூட்டர்கள் முக்கான நிலையில் மக்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முக்கியமாக இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு மக்களை கவரும் வகையில் இருந்தது

இதனால் பெங்களூர் மக்கள் பலர் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினார்கள். இந்நிறுவனம் பெங்களூருவில் தான் முதன்முதலாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் முதல் பேச்சில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்லாம் விற்று தீர்ந்தது. தற்போது இந்நிறுவனம் மீண்டும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்கி உள்ளது.

அதன்படி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்யலாம் அல்லது பெங்களூரில் இந்நிறுவனம் துவங்கியுள்ள ஷோரூம்களுக்கு நேரும் நேரில் சென்றும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்யலாம். இப்பொழுது புக்கிங் செய்யப்பட்ட ஸ்கூட்டர்கள் விரைவில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 6.7 கிலோ வாட் மோட்டாரை கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது. இது 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடியில் பிக்கப் செய்து விடும் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 120 கிலோமீட்டர் பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஸ்கூட்டரில் பயணம் செய்ய பல்வேறு விதமான ரைடு மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்ய 800 போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜரும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிற்கு கீழே 43 லிட்டர் கொண்ட ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளன. முன் பக்கம் 12 லிட்டர் கொண்ட கிளவ் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 1.38 லட்சம் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது முதல் தற்போதைய வரை ரூபாய் 13,000 விலை அதிகமாகி உள்ளது

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் உள்ள ஏத்தர் 450 எஸ், டிவிஎஸ் ஐ க்யூப் எஸ், பஜாஜ் சேத்தக் ப்ரீமியம் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூர் நகரில் விற்பனையாகி வருவதால் நகரில் உள்ள மக்கள் பலர் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *