பேஸ் பால்னா என்னனு தெரியல.. ஆனால் இது மட்டும் கண்டிப்பாக நடக்கும்.. இங்கிலாந்தை வம்பிழுத்த பும்ரா

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டத்தை அவர்கள் நாட்டு ஊடகம் பேஸ் பால் என்று அழைக்கிறது. இந்த அதிரடி கிரிக்கெட்டை போட்டியில் ஆடுவதன் மூலம் இங்கிலாந்து அணி பல போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது.

எனினும் ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி முதல் சரிவை கண்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது.

இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் பேட்டி அளித்த பும்ரா, இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டம் குறித்து தம்மால் எந்தத் தொடர்பும் படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் உண்மையிலே பேஸ் பால் என்ற வார்த்தையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இங்கிலாந்து அணி, தற்போது வெற்றிகரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள்.

அதிரடியாக விளையாடி எதிரணியை எதிர்கொள்வதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டை இப்படியும் ஒரு வழியில் விளையாடலாம் என்று உலகத்திற்கு அவர்கள் காட்டுகிறார்கள். ஆனால் ஒரு பவுலராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் போது நாங்களும் போட்டியில் இருப்போம்.

பேட்ஸ்மேன்கள் என்னுடைய பந்துவீச்சை அதிரடியாக ஆடும் போது நிச்சயம் அவர்கள் என்னை தொய்வுபடுத்த முடியாது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நாங்களும் விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்வோம். இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடினால் அதனை எப்படி எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பதை மட்டும் தான் நான் யோசிப்பேன்.

அதிரடியாக விளையாடுவதற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆனால் ஒரு பவுலராக நீங்கள் எப்போதுமே போட்டியில் இருப்பீர்கள். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும் என்று பும்ரா கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *