தினம் தினம் புதிய உச்சம்! 6 மாதத்தில் 124% லாபம் கொடுத்த Pritika auto பங்குகள்..
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது 2023 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
பொதுவாக நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் அந்நிறுவன பங்குகளின் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் மதிப்பீடுகளும் அந்நிறுவன பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.கடந்த சில தினங்களாக ஸ்மால் கேப் பிரிவை சேர்ந்த வாகன பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த மல்டிபேக்கர் பங்கு பிரித்திகா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்.
இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.380 கோடியாக உள்ளது. பிரித்திகா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிராக்டர் மற்றும் வாகன பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எந்திர வார்ப்பு மற்றும் ஆட்டோமோடிவ் டிராக்டர் மற்றும் வாகன பாகங்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.12.42 கோடி ஈட்டியிருந்தது.
மேலும், 2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.4.36 கோடியும், 2023 செப்டம்பர் காலாண்டில் ரூ.3.83 கோடியும் ஈட்டியுள்ளது.பிரித்திகா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் வலுவான நிதி முடிவுகள் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் எப்போதும் இப்பங்குக்கு வரவேற்பு காணப்படுகிறது. கடந்த சில வர்த்தக தினங்களாக இந்நிறுவன பங்கு விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரித்திகா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை அப்பர் சர்க்கியூட்டை தொட்டது.