அயோத்தி ராமர் கோயில் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கு பா. ரஞ்சித் பதில்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல நடித்துள்ள படம் ப்ளூ ஸ்டார். எஸ்.ஜெயக்குமார் இயக்கும் இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை விமர்சித்து பேசினார்.

அப்போது “ நம் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை எனில் நம்மை தீவிரவாதி ஆக்கிவிடுவார்கள். இந்த நிகழ்வுகள் இன்னும் 5 -10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்ற அச்சத்தை தருகிறது” என்று தெரிவித்தார். மேலும் மதச்சார்பினை இந்தியா எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அயோத்தி ராமர் கோயில் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர் “ இன்று ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னணியில் உள்ள மத அரசியலை கவனிக்க வேண்டும்.

கோயில் கூடாது என்பது நம் பிரச்சனை இல்லை. கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பதே நமது கவலை. கோயில்கள் திறக்கப்படுவதற்கு நான் எதிரி இல்லை. அதை கடவுள் நம்பிக்கையுடன் பார்க்கலாம். ஆனால் அதை அரசியலாக்குவது தான் இங்கு பிரச்சனை.

ரஜினிகாந்த் இந்த ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்வது அவரின் விருப்பம். அவர் தனது ஏற்கனவே தெரிவித்துள்ளார். 500 ஆண்டு பிரச்சனை தீர்ந்துவிட்டதாக அவர் கூறுகிறார். ஆனால் அந்த பிரச்சனைக்கு பின்னால் இருக்கும் அரசியலை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் உள்ளது. ரஜினி சொன்ன விஷயங்கள் சரி, தவறு என்பதை தாண்டி அதில் எனக்கு விமர்சனம் உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் திரௌபதி முர்மு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மோசமானது. ராஜஸ்தானில் தலித்கள் கொடுத்த நிதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் பிரசாதம் வழங்கக்கூடாது என்பதே மோசமானது” என்று தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *