Emirates Draw ஹைதராபாத் புது மாப்பிளைக்கு அடித்த ஜாக்பாட்: லட்சங்களில் கொட்டிய பணம்!
எமிரேட்ஸ் டிரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி கேமிங் குலுக்கல் ஆகும். இதில், MEGA7, EASY6 மற்றும் FAST5 ஆகிய மூன்று வகைகள் உள்ளன. வாரந்தோறும் நடைபெறும் இந்த கேமிங் குலுக்கல்களில் கோடிகளை பலரும் பரிசாக தட்டிச் செல்வர்.
அந்த வகையில், எமிரேட்ஸ் டிராவின் சமீபத்திய FAST5 குலுக்கலில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மோஷின் கான் (34) வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 75,000 திர்ஹாம்கள் பரிசாக கிடைத்துள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,98,317 ஆகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனை மேலாளராக பணிபுரியும் மோஷின் கான், எமிரேட்ஸ் டிராவில் வெற்றி பெற்ற வரிசையின் 42 பந்துகளில் ஐந்து எண்களைப் பொருத்தி வெற்றி வாகை சூடியுள்ளார். அவருக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் திருமணம் நடைபெறவுள்ளது. வெற்றிப் பணத்தை திருமண செலவுகளுக்கு பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது திருமணத்திற்கு எப்படி பணம் புரட்டுவது என மிகவும் கவலைப்பட்டேன். எமிரேட்ஸ் டிராவுக்கு எனது நன்றி. எனது புதிய வாழ்க்கையை இந்த பணத்தின் மூலம் என்னால் எளிதாக தொடங்க முடியும்.” என மோஷின் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக எமிரேட்ஸ் டிராவில் பங்கேற்று வரும் மோஷின் கானும் இது இரண்டாவது வெற்றியாகும். Emirates Draw Easy6 இல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.3,39,709 பரிசுத்தொகையை அவர் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய எமிரேட்ஸ் டிரா EASY6 இல் ஆந்திர மாநிலம் கஞ்சிகச்சேர்லாவை சேர்ந்த ராஜவரபு குமார் (35) என்பவர் ரூ.16,98,317 பரிசுத்தொகையை தட்டிச் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது கண்களையே என்னால் நம்ப முடியவில்லை; ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்தேன். எனது மனைவி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது நம்ப முடியாத தருணம்.” என தெரிவித்துள்ளார்.