ஆர்.டி முதலீடுக்கு 8 சதவீதம் வட்டி; இந்த 5 வங்கிகளை செக் பண்ணுங்க!
Recurring-deposit-account | பொதுவாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
அவர்களின் முதல் தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன.
1) கனரா வங்கி
கனரா வங்கி 6 முதல் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது.
2) பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி 5.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது. மூத்தக் குடிமக்கள் 6 முதல் 7.50 சதவீதம் வரை வட்டி விகிதம் பெறுவார்கள்.
3) யெஸ் வங்கி
யெஸ் வங்கி, 5.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வட்டி விகிதத்தை ஆர்.டி. முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. மூத்தக் குடிமக்கள் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டியை பெறுவார்கள்.
4) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.25 சதவீதம் முதல் 6.75 சதவீதம் வரை ஆர்.டி. முதலீடுகளுக்கு வட்டி வழங்குகிறது. மூத்தக் குடிமக்கள் 6.75 முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் பெறுவார்கள்.
5) பந்தன் வங்கி
பந்தன் வங்கி 6 முதல் 10 ஆண்டுகள் வரை ஆர்.டி. திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களுக்கு வங்கி 5.50 முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்தக் குடிமக்கள் 6 முதல் 7.50 சதவீதம் வட்டி விகிதம் பெறுவார்கள்.
ஆர்.டி எனப்படும் தொடர் வைப்புத் திட்டத்தில் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.