இன்று மாலை… மிஸ் பண்ணாதீங்க… செல்வ செழிப்பு தரும் செவ்வாய் பிரதோஷம்! வழிபடும் முறை!
இன்று மாலை நேரத்தை மிஸ் பண்ணாதீங்க. தை மாதத்தில் வருகின்ற பிரதோஷ தினம், செவ்வாய் பிரதோஷமாக அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு மாதமும், மாதத்திற்கு இரு முறை என திரையோதசி திதியில் வருவது பிரதோஷம் தினமாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்து வரும் திரயோதசி திதியில் பிரதோஷம் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.
சிவபெருமானுக்கு உகந்த நாள் பிரதோஷ நாள். பிரதோஷ வேளை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் நமது கர்மவினைகள் நீங்கவும், நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் வழிபாடு செய்திட மேன்மையான பலன்களை பெற முடியும்.
அந்த வகையில் செவ்வாய் கிழமையான இந்த பிரதோஷ நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனே செவிசாய்க்கிறார் என்கின்றது சிவபுராணம். பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்திட வாழ்வின் இன்னல்கள் நீங்கி சுபிட்சங்களை பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.
இன்றைய தினத்தில் சிவபெருமானுடன் நந்தியையும் தரிசித்து வில்வம் , அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இயன்ற அளவு வயிற்றுப் பசியால் வாடுபவர்களுக்கு அன்னமிடலாம்.பொதுவாக எல்லா பிரதோஷங்களும் தனி சக்தி வாய்ந்தவை
இந்த காலத்தில் தான் சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்றார். இந்த நேரத்தில் அவரின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் கண்டுக் களிப்பதாக ஐதிகம்.
பிரதோஷ வேளையான மாலை நேரத்தில் வீட்டில் இருந்த படியே ‘ஓம் நமச்சிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க இதுவரை முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று விடுவதை அனுபவ பூர்வமாக உணரலாம்.