இன்று செல்வங்களை குவிக்கும் செவ்வாய் பிரதோஷம்… இப்படி வழிபாடு செய்து பாருங்க!
இன்று தை மாதத்தில் வருகின்ற பிரதோஷ தினம். அதிலும், செல்வங்களைக் குவிக்கும் செவ்வாய்க்கிழமைகளில் வருகின்ற பிரதோஷம்.
பொதுவாக, ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்த திரையோதசி திதியில் பிரதோஷ தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம். பிரதோஷ காலங்களில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று ஜனவரி 23ம் தேதி செவ்வாய் கிழமை பிரதோஷ தினமாக உதித்துள்ளது.
செவ்வாய் கிழமையில் பிரதோசம் வருவதால் இந்த நாளில் சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வளமான மேன்மையான வாழ்வு பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அனைத்து பிரதோஷங்களும் சிறப்பு தான் . இருந்த போதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
ஒருவன் தொடர்ந்து 11 பிரதோஷ நாளில் வழிபாடு செய்தால் துன்பங்கள் கரைந்து எண்ணிய காரியம் ஈடேறும். இன்று செய்யும் சிவ வழிபாடு சூரியனின் அருளும், சிவ பெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.அத்துடன் புகழ், பெருமை, மகிழ்ச்சி, அமைதி மற்றும் நீண்ட ஆயுளும் கூடும். ஜாதகத்தில் வரும் சூரிய தோஷம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.