ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடும் புதிய ஹீரோ மாவ்ரிக் 440 அறிமுகம்! விரைவில் புக்கிங் ஆரம்பம்!

ஹோரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தனது மாவ்ரிக் (Mavrick) பைக்கை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மோட்டார் சைக்கிள் சந்தையில் அதிக போட்டி நிறைந்த நடுத்தர திறன் கொண்ட பைக்குகள் பிரிவில் புதிய போட்டியாளராகக் களமிறங்கியுள்ளது.

Mavrick ஹீரோ நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த இருசக்கர வாகனமாக இருக்கும். ரோட்ஸ்டர் ஹார்லி-டேவிட்சன் X440 போன்ற பிளாட்பார்ம் கொண்ட இந்த பைக், அதே போன்ற பவர்டிரெய்னையும் பயன்படுத்துகிறது.

ஹீரோ மாவ்ரிக் (Hero Mavrick) 440 cc சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜின் கொண்டிருக்கிறது. இது அதிகபட்சமாக 27 ஹெச்பி பவரையும், 36 என்எம் பீக் டார்க்கையும் கொண்டது. இன்ஜின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் முன்புறத்தில் 43மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர்களையும் பயன்படுத்துகிறது. இரு புறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

முன்புறத்தில், H-வடிவ DRL உடன் ஒரு வட்ட ஹெட்லேம்ப் இருக்கிறது. ஒற்றை இருக்கை, எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், புளூடூத் இணைப்பு, கால் அலர்ட் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. இ-சிம், டயமண்ட்-கட் அலாய் வீல் போன்ற பிற அம்சங்களும் குறிப்பிடத்தக்கவை.

Mavrick பைக் வெள்ளை, சிவப்பு, நீலம், கருப்பு மற்றும் மேட் பிளாக் ஆகிய ஐந்து விதமாக வண்ணங்களில் கிடைக்கும். இந்த பைக் பேஸ், மிட் மற்றும் டாப் என மூன்று வகைகளிலும் கிடைக்கிறது.

Hero Mavrick தற்போது சந்தையில் உள்ள Royal Enfield Classic 350, Triumph Speed 400, Honda H’ness CB350, Jawa 42, Harley-Davidson X440 போன்ற ரோட்ஸ்டர் பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கப்போகிறது. இந்த பைக்குக்கான முன்பதிவு பிப்ரவரி 2024 இல் தொடங்கும் என்றும் ஏப்ரலில் டெலிவரி செய்யப்படும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவிக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *