ரூ.2.47 கோடியை அசால்டாக திருடியது எப்படி? ரகசியத்தை உடைத்த செல்போன் திருடன்!
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான ஐபோன்களை திருடியதற்காக 94 மாத சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நபர் ஒருவர், தனது கிரிமினல் வர்த்தகத்தின் ரகசியத்தை வெளியிட்டு இதுபோன்ற திருட்டுகளில் இருந்து ஒருவர் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை வெளிப்படுத்தியுள்ளது வைரலாகி உள்ளது.
Wall Street Journal-க்கு அளித்த பேட்டியில், மினசோட்டாவில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஆரோன் ஜான்சன், ஐபோன்களைத் திருடுவதன் மூலமும் அவற்றின் நிதி பயன்பாடுகளைக் கையாளுவதன் மூலமும் சுமார் 300,000 டாலர்கள் சம்பாதித்ததை வெளிப்படுத்தினார்.
26 வயதான அந்த நபர், மதுக்கடைகள் மற்றும் கிளப்-களுக்குச் சென்று பெரும்பாலும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து இதனைச் செய்வாராம், ஏனெனில் சந்தேகத்திற்கிடமான நடத்தைக்கு பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார். ஏற்கனவே குடிபோதையில் இருப்பவர்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியாது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் பின்னர் அவர்களின் ஐபோனை ஒப்படைப்பார், அதோடு அவர்களின் மொபைல் பாஸ்வோர்டை கேட்டு நினைவில் வைத்துக்கொள்வார். ஒருமுறை, 26 வயதான ஜான்சன், அவர் ஆப்பிள் ஐடி பாஸ்வோர்டை நாம் நினைப்பதைவிட வேகமாக மாற்றிவிடுவார். பின்னர், ஃபைண்ட் மை ஐபோன் போன்ற கண்காணிப்பு அம்சங்களை செயலிழக்கச் செய்வார், அதோடு ஃபேஸ்ஐடியில் தனது சொந்த பயோமெட்ரிக்கைச் சேர்ப்பார். இப்படி பல அம்சங்களை செயலிழக்கச் செய்து பின்னர் அவர்களது ஐபோனை தன்வசமாக்குகிறார்.
அதன் பின்னர் ஐபோன்களை ஒரு வார இறுதியாக பார்த்து 30 ஐபோன்கள் மற்றும் ஐபாட்களை கொடுத்து 20,000 டாலர்களை சம்பாதித்தது அவர் பேசியது மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
Wall Street Journal-ன் படி, ஜான்சனும் அவரது கூட்டாளிகளும் 300,000 டாலர்கள் இதுவரை திருடியதை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறியுள்ளது. இது இந்திய மதிப்பில் 2 கோடியே 47லட்சத்து 36 ஆயிரத்து 702 ரூபாய் ஆகும். ஆப்பிள் நிறுவனம் அதன் Stolen Device Protection-ஐ iOS 17.3-ல் வெளியிடுவதற்கு முன்பு இவை அனைத்தும் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டியில் பேசிய ஜான்சன், அறிமுகமில்லாத இடத்தில் செல்போன் அல்லது செல்போனின் பாஸ்வோர்டை பகிர வேண்டாம் என்று கூறினார். தான் திருந்தி வாழ விரும்புவதாகவும் மக்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பதாகவும் ஜான்சன் கூறினார்.