ரோகித் சர்மாவுக்கு குழி பறிக்கும் பும்ரா.. ஹர்திக்கை தொடர்ந்து மெயின் சுவிட்சில் கை வைத்த வேகம்
ஹர்திக் பாண்டியா தன்னுடைய கேப்டன் பதவிக்கு காய் நகர்த்துகிறார் என்று தெரிந்த உடனே டி20 போட்டியில் தான் விளையாட போகிறேன் என்று ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகவும் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட போகிறார்.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பும்ரா, டெஸ்ட் போட்டியில் மீண்டும் கேப்டனாக வேண்டும் என்பது போல் பேசியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்றும் அதிலும் கேப்டனாக செயல்படுவது பெருமைக்குரியது என்றும் பேசி இருக்கிறார். மேலும் தமக்கு டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவி கொடுத்தால் நான் ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் பேட் கம்மின்ஸ், கேப்டன் பதவியை சிறப்பாக செயல்பட்டு வருவதாக எடுத்துக்காட்டுடன் பும்ரா கூறியிருக்கிறார். மேலும் வேக பந்துவீச்சாளர் தான் அணிக்கு தேவையான அனைத்து கடினமான பணிகளையும் செய்வதாகவும், வேகப்பந்து வீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள் என்றும் அவர்கள் கேப்டனாக இருந்தால் போட்டியை சுற்றியே எப்போதுமே யோசித்து வித்தியாசமான முடிவு எடுப்பார்கள் என்றும் பும்ரா கூறியிருக்கிறார்.