டி 20 உலகக் கோப்பையில் இஷான் கிஷனுக்கும் ரிஷப் பண்ட்டுக்கும் இடையே போட்டி- டிராவிட் அறிவிப்பு!
இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.
தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் கண்டிப்பாக களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜூன் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் “ரிஷப் பண்ட்டுக்கும் இஷான் கிஷானுக்கும் இடையே உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு போட்டி நிலவும்” எனக் கூறியுள்ளார்.