எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக சேர்மன்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!
திமுக உசிலம்பட்டி சேர்மன் சகுந்தலா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 24 வார்டுகள் கொண்ட உசிலம்பட்டி நகராட்சியில் திமுக- 12, அதிமுக -9, அமமுக -2, காங்கிரஸ்-1 ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் தலைவர் பதவிக்கு 10-வது வார்டு கவுன்சிலர் செல்வியையும், துணைத்தலைவர் பதவிக்கு 19-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் தேன்மொழியையும் வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்தது.
ஆனால் நகர செயலாளர் தங்கமலை பாண்டி தனது மனைவி பாண்டி அம்மாளுக்கு தலைவர் பதவி வழங்கப்படாததால் அவரது ஆதரவாளரான சகுந்தலாவை போட்டியிட வைத்து அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் பெற்றி பெற்றார். இதனையடுத்து உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கப்பாண்டி கட்சியில் திமுக தலைமை நீக்கியது.
இந்நிலையில், திமுக உசிலம்பட்டி சேர்மன் சகுந்தலா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார். மேலும், திமுக சேர்மன் சகுந்தலாவின் மகனும், மதுரை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், திமுக முன்னாள் செயற்குழு உறுப்பினர் சோலை ரவி உள்ளிட்டரும் அதிமுகவில் இணைந்தனர்.