காது வடிவமே உங்கள் ஆளுமை பற்றி தெளிவாக சொல்லும்… உங்க காது எப்படி?
ஒருவரது காதுகளுக்கும் ஆளுமைக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் காதுகள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதை வெளிப்படுத்தும் ஆளுமை சோதனையை இங்கே பார்க்கலாம்.
உங்கள் காதுகள் பெரிதாக உள்ளதா அல்லது சிறியதாக உள்ளதா? இந்தக் காது ஆளுமைப் பரிசோதனையைப் படிக்கத் தொடங்கும் முன் கண்ணாடியில் அல்லது உங்கள் புகைப்படத்தைப் பாருங்கள். காது வடிவத்தின் அடிப்படையில் உங்கள் மறைக்கப்பட்ட ஆளுமைப் பண்புகளை ஆராயுங்கள்.
பெரிய காதுகளின் ஆளுமைப் பண்புகள்:
நீங்கள் பெரிய காதுகள் உடையவராக இருந்தால், உங்கள் ஆளுமைப் பண்புகள் நீங்கள் திறந்த மனதுடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. நிலைமை என்னவாக இருந்தாலும், நீங்கள் பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடிப்பீர்கள். ஆகவே, நீங்கள் ஒரு நிலையான மற்றும் வலிமையான் நபர். நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலுக்காக மக்கள் உங்களை நாடுவார்கள். எந்த மன அழுத்தமும் இன்றி, கவலையும் இன்றி, வாழ்க்கையை வந்தபடியே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இல்லாமல், நேரம் வரும்போது எப்படி முன்னேறுவது என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள். புதியவர்களைச் சந்திப்பதும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.
சிறிய காதுகளின் ஆளுமைப் பண்புகள்:
உங்கள் காதுகள் சிறியதாக இருந்தால், உங்கள் ஆளுமைப் பண்புகள் நீங்கள் ஒரு அமைதியான நபர் என்பதை வெளிப்படுத்துகின்றன. நீங்கள் கூர்ந்து கவனிக்கும் குணம் உடையவர்.
நீங்கள் குறைந்த நேர பேச்சு அல்லது வதந்திகளை விட அர்த்தமுள்ள உரையாடல்களை விரும்புகிறீர்கள். உங்கள் ஆளுமை ஆழமானது. நீங்கள் பெரிய கூட்டத்தை விரும்பாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு நல்ல இணைப்பைப் பகிர்ந்துகொள்ளும் நபர்களுடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறீர்கள் அல்லது எங்காவது அமைதியாகவும் திறந்த மனதுடனும் நல்ல உரையாடலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்.