புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா: பிரதமர் ரிஷிக்கு முதல் தோல்வி
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்தும் மசோதா, நாடாளுமன்ற கீழ்வையில் வெற்றி பெற்ற நிலையில், மேலவையில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா
பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்களை ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைப்பதுதான் ருவாண்டா திட்டம்.
விடயம் என்னவென்றால், புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்குத்தான் பெரும்பாலும் கொண்டு செல்லப்படுவார்களேயொழிய, அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுதான் அச்சத்தை உருவாக்கியுள்ள விடயம்.
அதாவது, இப்படி ஒரு திட்டம் இருப்பதால், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர வெளிநாட்டவர்கள் பயப்படவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
மேலவையில் தோல்வி
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா கீழவையில் வெற்றி பெற்ற நிலையில், மேலவையில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
ஆம், ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு நிரூபிக்கும்வரை, ருவாண்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தாமதிக்கவேண்டும் எனக் கோரும் மசோதா ஒன்று மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.