தீமையுடனான கொடிய மோதல் இது! ஜெலென்ஸ்கியை சந்தித்த ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்
போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை உக்ரைனில் சந்தித்து பேசினார்.
டொனால்டு டஸ்க்
ரஷ்யாவுடனான மோதல் நீடிக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்க் (Donald Tusk) உக்ரைன் சென்றுள்ளார்.
அங்கு அவர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்த அவர், புதிய இராணுவ உதவிப் பொதியை அறிவித்தார். அதில் பாரிய ஆயுதங்களை வாங்குவதற்கான கடன் மற்றும் அவற்றை ஒன்றாக உற்பத்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறியும் அர்ப்பணிப்பு ஆகியவை அடங்கும்.
அத்துடன் தானிய ஏற்றுமதி மற்றும் Trucking தொடர்பாக தங்கள் நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஒரு புரிதலை அடைந்ததாக கூறினார்.