7.2 ரிக்டர் அளவில் சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 47 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு… 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்… !

இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை என்சிஆர் பகுதியில் இரவு 11.45 முதல் 12 மணிக்குள் மக்கள் கடும் அதிர்வை உணர்ந்துள்ளனர்.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனா – கிர்கிஸ்தான் எல்லையில் ஜின் ஜியாங் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சீன மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

சீனாவில் வடமேற்கில் அமைந்துள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் மலையும், பாலைவனப்பகுதிகளும் அதிகம். இந்த நிலநடுக்கத்தில் 47 பேர் வரை இடிபாடுகளில் புதைந்ததாகத் தெரிகிறது. சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீனாவில் சமீப காலமாக இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன. அதி கனமழை ,நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் சீனா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *