தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் உடல் நசுங்கி பலி… 3 பேர் கவலைக்கிடம்… !
தர்மபுரியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் குடியாத்தம் சரவணன் மற்றும் ஒரு பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 5க்கும் மேற்பட்டோரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் உயிரிழந்தவர்கள் குடியாத்தம் சரவணன் , பெங்களூரு ரோஜா, சிவா என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாதவன் , குமரேஷ் , குடியாத்தம் சாந்தி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.