பெரும் சோகம்… 3 வயது குழந்தை டெங்குவால் பலி… கதறித் துடித்த பெற்றோர்… !
அதே நேரத்தில் பருவகால நோய்களும் பரவத் தொடங்கியுள்ளன. ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகின்றன. சுகாதாரத்துறை தேவையான முன்னெச்ச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகிறது.
சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேஸ்வரன். இவருக்கு 2 பெண் குழந்தைகள். முதல் குழந்தை 4 வயது திகன்யாஸ்ரீ , 2 வது குழந்தை 3 வயது தியாஸ்ரீ.இதில் மூத்த குழந்தை திகன்யாஸ்ரீ சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார்.
இரண்டு குழந்தைகளுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனையடுத்து இருவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தியாஸ்ரீக்கு காய்ச்சல் அதிகமானதால் உள்ளூரில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் தியாஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.