தினமும் குடித்து விட்டு வந்து அடித்து உதைப்பார் : ஷகிலா மீது வளர்ப்பு மகள் குற்றச்சாட்டு

வர்ச்சி நடிகை ஷகிலா திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் தனது அண்ணன் மகள் ஷீத்தலை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வளர்ப்பு மகள் தன்னை அடித்து கீழே தள்ளியதாகவும், தனது பெற்ற தாயுடன் இணைந்து எனது சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார் என்று ஷகிலா தன் வளர்ப்பு மகள் மீது குற்றம் சாட்டி மாம்பலம் போலீசில் புகார் செய்துள்ளார். ஷகிலா தினமும் குடித்து விட்டு வந்து போதையில் தன்னை அடித்து உதைப்பதாக வளர்ப்பு மகளும் தற்போது புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக ஷீத்தல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு ஷகிலாவின் சொத்து மீது சிறிதும் ஆசை இல்லை. அதை அபகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஷகிலா தினமும் குடித்து விட்டு வந்து குடி போதையில் எனது தாய் மற்றும் சகோதரி குறித்து மோசமாக பேசினார். இதுதான் சண்டை வர முக்கியக் காரணம். தினமும் குடித்துவிட்டு ஷகிலா என்னைக் கடுமையாகத் தாக்குவார். அடித்து உதைப்பார்.

இந்த சம்பவத்தில் அவர் என்னை முதலில் அடித்தார். அதனால்தான் நான் திருப்பி அடித்தேன். பிறகு அவரது வழக்கறிஞர் சமாதானம் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து எங்களது தலைமுடியை பிடித்துக்கொண்டார். அதனால்தான் என் அம்மாவும் தாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார். தன் மகளை ஷகிலா தவறான வழியில் கொண்டு செல்ல பார்க்கிறார் என்று ஷீத்தலின் தாயார் முன்னமே குற்றம் சாட்டி இருந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *