திமிரு காட்டிய சௌகார் ஜானகி! பின் கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட சம்பவம்
உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி அவர்களும் சௌகார் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த படம் அது.
1968 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு நடக்க தொடங்கியது.
அதில் சிவாஜி கணேசன் சவுகார் ஜானகி வாணிஸ்ரீ மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய சிறு நாட்களிலேயே தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒருவழியாக தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு, உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குகிறது. அன்று முதல் நாள் சூட்டிங். வழக்கம்போல் அனைவருக்கும் முன் சிவாஜி வந்துவிட்டார். அன்று சிவாஜியுடன் சௌகார் ஜானகி நடிக்க வேண்டும் அவர் வீட்டிலேயே அனைத்து ஒப்பனைகளையும் செய்து செடிர்க்குள் வருகிறார்.
அவரைப் பார்த்து சிவாஜி அவர்கள் அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருவரை அழைத்து, ஸ்ட்ரைக்கு முன் நடந்த காட்சியின் பொழுது சௌகார் ஜானகி கருப்பு நிற சேலையை கட்டி இருந்தார். இப்பொழுது வேற நிற சேலையில் வந்திருக்கிறார் என்று கூறுகிறார்.
உடனே அசிஸ்டன்ட் டைரக்டர் போய் இதை சொல்ல, உடனே சௌகார் ஜானகி,” நடித்த எனக்கு தெரியாதா “என்று சொல்லி திமிரு காட்டி இருக்கிறார்.
பின் அதை காட்சியை நடித்து முடித்த பிறகு ஒரு வழியாக முந்தைய காட்சிகளின் ரீல்களை எல்லாம் போட்டு பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
“உங்களுக்கு தானே சந்தேகம் எனக்கு இல்லை” என்று சொல்லி சௌகார் ஜானகி தனது ஒப்பனை அறைக்கு போய்விட்டார்.