கிளாசில் ஊற்றும் போதே உறைந்த பீர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
உலகம் முழுவது தற்போது குளிர் வாட்டி வதைக்கிறது. சில நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு நிலப்பரப்பிற்கு ஏற்ப குளிரின் தன்மை மிதமாகவும், அதிகமாகவும் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெஃப் கேப்ஸ் என்பவர் ஒரு இயற்கை புகைப்பட கலைஞர் ஆவார். அவர் அண்டார்டிகாவின் உறைபனியில் நின்றுக்கொண்டு வீடியோ எடுத்துள்ளார். அதில் பேசிய அவர், தான் அண்டார்டிகாவின் தென் துருவத்தில் இருப்பதாகவும் அங்கு வெப்பநிலை -84 டிகிரி பாரன்ஹீட் மற்றும் -64 டிகிரி செல்சியஸ் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது குளிருக்கு இதமாக பீர் குடிக்க திட்டமிடும் அவர், பீர் கேனையும், கண்ணாடி கிளாசையும் கையில் எடுக்கிறார். பின்னர் பீர் கேனை திறந்து அதை ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றுகிறார். ஆனால் அவர் பீரை ஊற்றிக்கொண்டிருக்கும் போதே அது அப்படியே உறைந்து கண்ணாடி கிளாசுடன் ஒட்டிக்கொள்கிறது. கேனில் இருந்து கண்ணாடி கிளாசில் ஊற்றுவதற்குள்ளே பீர் உறைந்துவிட்டது என்றால் அங்கு எப்படியான சூழல் நிலவும் என்பதை நம்மால் யோசித்துக்கூட பார்க்க முடியாது.
View this post on Instagram
இவ்வாறு அண்டார்டிகாவின் கடும் குளிரை வீடியோவாக எடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதும் அது வேகமாக வைரலாக தொடங்கியது. அதுமட்டுமன்றி பலரும் அந்த வீடியோ குறித்து தங்கள் சந்தேகங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது வரை 2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.