வட்டியை அள்ளிக்கொடுக்கும் வங்கி… ஃபேங்க் ஆஃப் இந்தியா கொடுக்கும் ஃபிக்சட் டெபாசிட்!
புதிய ஆண்டு பிறந்திருப்பதை முன்னிட்டு நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டிகளை புதுப்பித்துள்ளன. அவற்றில் ஃபேங்க் ஆஃப் இந்தியா மிகச் சிறப்பான வட்டியுடன் கூடிய சூப்பர் பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதற்கு முன்பு வரை பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 175 நாள் காலவரம்பில் 6 சதவீத வட்டியை ஃபேங்க் ஆஃப் இந்தியா வழங்கி வந்தது. தற்போது இதே கால வரம்பில் ரூ.2 கோடி முதல் ரூ.50 கோடி வரை முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 7.50 சதவீத வட்டி தொகை வழங்கப்படும் என்று ஃபேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறுகிய கால சலுகை ஆகும். ஆகவே ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர்கள் மிக துரிதமாக இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர் ரூ.2 கோடி முதலீடு செய்தார் என்றால் 175 கால வரம்பு முதிர்வில் அவருக்கு வட்டி தொகையாக ரூ.7.19 லட்சம் கிடைக்கும். வாடிக்கையாளருக்கு ஏறக்குறைய ஆறு மாத கால முடிவில் முதலீடு மற்றும் வட்டி தொகையுடன் சேர்த்து ரூ.2,7,19,178 கிடைக்கும். அதேபோல அனைத்து பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதியவர்களுக்கு 0.50 முதல் 0.65 சதவீதம் வரையில் கூடுதலான வட்டியை ஃபேங்க் ஆஃப் இந்தியா வழங்குகிறது.
ஆனால் இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரையில் காலவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 60 வயது முதல் 80 வயது வரையிலான முதியவர்களுக்கு 0.50 சதவீத கூடுதல் வட்டியும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 0.65 சதவீத கூடுதல் வட்டியும் வழங்கப்படும் என்று ஃபேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.இதேபோல எஸ்பிஐ வங்கி, பெடரல் வங்கி போன்றவை ரூ.2 கோடிக்கு கீழான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதல் வட்டி சலுகையை அறிவித்துள்ளன.
டிசிபி வங்கி வழங்கும் கேஷ் பேக் சலுகை :
தனியார் துறை வங்கியான டிசிபி வங்கி சார்பில் இந்த புத்தாண்டில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு அளவில் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கேஷ் பேக் வழங்கப்படும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.