வீட்டுல விசேஷம்.. டான்ஸில் தெறிக்கவிட்ட சாய்பல்லவி.. வீடியோ வைரல்!
நடிகை சாய் பல்லவி தனது தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன், வினித் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
வீடியோவை பார்க்க –
https://twitter.com/SaipallaviFC/status/1749276519627997510
சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன், சித்திரை செவ்வானம் படத்தில் நடித்தவர். அதன் பிறகு படங்களில் நடிக்காத பூஜா கண்ணன், இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாய் பல்லவிக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அவருக்கு முன்பாகவே அவரது தங்கை பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம் செய்திருப்பது திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்தினருடன் சாய் பல்லவி ஆடும் ஆட்டம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், தெலுங்கில் முன்னணி நடிகருடன் நடிப்பது என சாய் பல்லவியின் கெரியர் முன்னோக்கி சென்று வருகிறது. இதனால் அவர் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.