NAMAN: சிறந்த சர்வதேச அறிமுக வீரர்களுக்கான விருது – மாயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி, அக்ஷர் படேல்!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்களுக்கு என்று பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதே போன்று உள்ளூர் தொடர்களான ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, கூச் பெஹார் டிராபி என்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு இந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் பிசிசிஐ சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியினர், இந்திய மகளிர் அணியினர், ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், கிரிக்கெட் வீரர்களின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பை அளித்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது வழங்கப்பட்டது. இதில், 2019 – 20 ஆம் ஆண்டுகளில் சிறந்த அறிமுக வீரருக்கான விருது மாயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.
2020 – 21: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – அக்ஷர் படேல் (டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் 5 விக்கெட்)
2021 – 22: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – ஷ்ரேயாஸ் ஐயர் (105 டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்)
2022 – 23: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (171 டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்)